Posts

மாந்தளிர்

அறிகுறிகள்: நீரழிவு. தேவையான பொருட்கள்: மாந்தளிர் . செய்முறை : மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

மணலிக்கீரை

Image
மணலிக்கீரை: மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மலச்சிக்கல் குணமாக: மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். ஞாபக சக்தி பெருக: ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும். குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய: மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு  நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும். மூளை நரம்புகள் பலம்பெற: மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால்  மூளை நரம்புகள் பலப்படும். ஈரல் பலம்பெற: மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும். இத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம் “நோயற்ற வாழ்வே குறைவ...